கள்ளக்காதலி கொன்று புதைப்பு : சரணடைந்தவர் திக் தகவல்….

கோவை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (44).தனியார் காஸ் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரத்தினா(44). சுந்தர்ராஜ் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ரத்தினாவை தேடி வந்தனர். ரத்தினா மாயமாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் சுந்தர்ராஜின் தம்பி வேலவராஜின் மாமனார் ரங்கராஜ்(55) என்பவர் பில்லூர் அடுத்த வெள்ளியங்காடு வி.ஏ.ஓ.,விடம் ரத்தினாவை கொன்று புதைத்ததாக கூறி சரண் அடைந்தார். கோவில்பாளையம் போலீசார் ரங்கராஜை கைது செய்தனர்.

விசாரணையில் ரங்கராஜ் பாலக்காடு கூட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், மகளை சந்திக்க வரும் போது ரத்தினாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி போனில் பேசியதும், இருவரும் பில்லூர் பகுதியில் தனிமையில் சந்தித்து கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி இருவரும் பில்லூரில் சந்தித்தபோது ரத்தினா இனிமேல் கணவருடன் வாழமாட்டேன், உங்களுடன் தான் வாழ்வேன் எனக்கூறியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரங்கராஜ் ரத்தினாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து பில்லூர் எழுத்துக்கல்புதூர் அருகே உள்ள கத்தாழைக்காடு எனும் இடத்தில் உடலை புதைத்தது தெரிய வந்தது. போலீசார் கத்தாழைக்காடு பகுதிக்கு சென்று ரத்தினாவின் எலும்புக்கூடு மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகளை கைப்பற்றினர். பின்னர் ரங்கராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (44).தனியார் காஸ் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரத்தினா(44). சுந்தர்ராஜ்

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.