பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் பையை பயன்படுத்திய இளம் ஜோடி: மருத்துவமனையில் அனுமதி

வியட்நாமில் இளம் ஜோடி ஒன்று ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனோய் அருகே இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது இளம் ஜோடி ஒன்று பாதுகாப்பு கருதி ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்துள்ள குறிப்பிட்ட ஜோடி உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஜோடிக்கு ஆணுறை வாங்க தயக்கமாக இருந்ததால் பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இதுபோன்ற நிலையில் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை என கூறும் மருத்துவர்கள், மருத்துவ ரீதியாகவும் விஞ்ஞான ரீதியகவும் இதுவரை பரிசோதனை செய்யப்படாததை அந்த ஜோடி பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் இதுபோன்று பயன்படுத்துவது பாதுகாப்பற்றது எனவும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது வியட்நாம் மக்களிடையே பாதுகாப்பு குறித்து ஏற்படுத்தியிருக்கும் அச்ச உணர்வையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹனோய் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரி இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில், அங்குள்ள 2700 மாணாக்கர்களில் 16 விழுக்காட்டினர் பாலுறவு வைத்துக்கொள்வதாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே பாதுகாப்பான முறையில் உறவு கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியதால் மருத்துவமனையில்

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.