கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவி

கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா இருவருக்கும் சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த பைக்கை நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும் முயற்சி செய்தனர். ஆனால் அந்த பைக் நிற்காமல் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கான்ஸ்டபிள்கள் இருவரும் அந்த பைக்கை விரட்டி சென்று மடக்கினர்.

பைக்கில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பைக்கில் சென்ற பெண்ணின் பெயர் பிரவல்லிகா மெண்டம் (25). அவரது கணவர் பெயர் புல்லையா மெண்டம். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

பிரவல்லிகாவுக்கு, 16 வயதே ஆன உறவுக்கார பையனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை உறவினர்கள் கண்டித்ததால் அண்மையில் கணவன்-மனைவி இருவரும் ஐதராபாத் பகுதிக்கு குடிவந்தனர்.

இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் புல்லையாவின் உடலை சனிக்கிழமை இரவு பிரவல்லிகா மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது சிக்கியுள்ளார். புல்லையாவை அடித்து கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் புல்லையா மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்க

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.