9 மாதங்கள் கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம் ; சாதித்த எலிசபெத்

1000 தடவைகளுக்கு மேல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எலிசபெத் ஸ்மார்ட் குறித்த சம்பவத்தில் இருந்து மீண்டு சாதித்துள்ளார்.

எலிசபெத் ஸ்மார்ட் (வயது 14) 2002 ஜூன் 5 ஆம் திகதி சால்ட் லேக் சிட்டியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எலிசபெத் ஸ்மார்டினை படுக்கை அறையில் இருந்து இழுத்து வந்த பிரைன் டேவிட் மற்றும் வண்டா இலீன் பார்ஸி கத்தி முனையில் சத்தம் போடக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

கத்தினால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவோம் என கூறினார். இதனால் பயந்து போன சிறுமி எலிசபெத் ஸ்மார்ட், அமைதியாக அவர்களுடன் வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

ஒருவேளை என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொல்வதாக இருந்தால், என்னை இங்கேயே கொன்றுவிடுங்கள். வெளியே அழைத்து செல்ல வேண்டாம். என் வீட்டில் நான் ஓடிவிட்டதாக தவறாக எண்ணுவதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

எலிசபெத் ஸ்மார்டினை கடத்தி சென்ற பிரைன் மற்றும் பார்ஸி, அவரை தவறான விஷயத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஏறத்தாழ 9 மாதங்கள் எலிசபெத் ஸ்மார்டினை தினமும் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பிரைன் மற்றும் பார்ஸி 2003 ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 15 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்பது மாத பாலியல் கொடுமைகளுக்கு பிறகு எலிசபெத் ஸ்மார்ட் வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய எலிசபெத் ஸ்மார்ட்டிடம் உனக்கு நேர்ந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. ஆனால், அதை நீ தாண்டி வந்துவிட்டாய். இனிமேல் உன் வாழ்வில் ஒரு நிமிடம் கூட வீணாக விட்டுவிடாதே. உன்னை சீரழித்தவர்களுக்கு நீ கொடுக்கும் சரியான தண்டனை, அவர்கள் முன் மகிழ்ச்சியாக வாழ்வதே ஆகும், என அவரின் தாய் அறிவுறுத்தினார்.

தனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்க கூடாது என எலிசபெத் ஸ்மார்ட், ஸ்மார்ட் பவுண்டேஷன் ஆரம்பித்தார். இந்த பவுண்டேஷன் மூலமாக, குழந்தைகளுக்கு ஏற்படும் சித்திரவதைகளை எதிர்த்து போராடினர்.

பிறகு தனக்கு நேர்ந்த சோகமான சம்பவங்களை “மை ஸ்டோரி எலிசபெத் ஸ்மார்ட்” என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

1000 தடவைகளுக்கு மேல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எலிசபெத் ஸ்மார்ட் குறித்த சம்பவத்தில் இருந்து மீண்டு சாதித்துள்ளார்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.