தண்ணீர் வாழ்வதற்கு எவ்வளவு முக்கியம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.
மருத்துவர்கள் கூட ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள்.
இந்நிலையில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பலன்களை இங்கே காணலாம்.
- வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தினால் ஏற்படும் தலைவலி குறையும்.
- உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
- வாயு தொல்லை உள்ளவர்கள், சுக்கு கலந்த வெண்ணீரை குடிக்க, வாயு தொல்லை நீங்கும்.
- அடிக்கடி தாகம் எடுப்பவர்கள், பச்சைத் தண்ணீருக்கு பதிலாக, வெந்நீரை குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
- கால் வலி உள்ளவர்கள், கால் பொறுக்கும் அளவிற்கு வெண்ணீரை ஒரு டப்பில் விட்டு, அதில் 2 தேக்கரண்டி கல் உப்பை போட்டு கலக்கவும். அதில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
- மிருதுவான சருமம் பெற, ஒரு தேக்கரண்டி பார்லியில் வெண்ணீரை ஊற்றி, அடிக்கடி குடித்து வரவும்.
- பலமான விருந்து சாப்பிட்டவர்கள், ஒரு டம்ளர் வெந்நீரை குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.