அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.
அமெரிக்காவின் Scarsdale பகுதியை சேர்ந்தவன் Alex(6). இவர் சமீபத்தில் அமெரிக்கா அதிபரான ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் சிரியாவில் வான்வழிதாக்குதலின் போது பாதிக்கப்பட்ட Omran Daqneesh(5) ரத்த வெள்ளத்துடன் ஆம்புலன்சில் இருக்கிறார். அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் Omran Daqneesh க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதை அமெரிக்கா அதிபர் ஒபாமா ஐ.நா சபையின் உச்சி மாநாட்டில் பலருக்கும் மத்தியில் வாசித்து காட்டினார்.
இச்சிறுவன் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்து விட்டதாகவும், மனிதாபிமானம் தற்போது உள்ள குழந்தைகளிடம் உள்ளது என இச்சிறுவன் நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.
அச்சிறுவன் எழுதிய வார்த்தைகளையும், அவன் பேசியதையும் ஒபாமா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 10,000 சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது, இதைத் தவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் சிரிய அகதிகள் தஞ்சம் அடைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.