கணவன், மனைவி என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட ஜோடியொன்று முகங்களை மறைத்துகொண்டே, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியான சம்பவமொன்று எல்ல பொலிஸில் இடம்பெற்றுள்ளது.
அந்த ஜோடியொன்றும் சும்மா செல்லவில்லை, 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டே முகங்களை மறைத்துகொண்டு வெளியேறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த ஜோடியொன்று கைகலப்பில் ஈடுபட்டதுடன் ஹோட்டலின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது.
இந்த சம்பவம்தொடர்பில், தொலைபேசியூடாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, விரைந்துசெயற்பட்ட பொலிஸார் அந்த ஜோடியை கைதுசெய்தனர். ஜோடியில் இருந்த பெண், 22 வயதானவர், பார்ப்பதற்கு எடுப்பான தோற்றமும், உதடுகளுக்கு உதட்டுச் சாயமும், நிகங்களுக்கு நகப்பூச்சிகளும் பூசியிருந்துள்ளார்.
குட்ட பாவடை அணிந்திருந்த அப்பெண், மேலங்கியும் உடுத்தியிருந்துள்ளார். எனினும், அந்த ஜோடி கடுமையான போதையில் இருந்துள்ளது. அவ்விருவரை கைது செய்த பொலிஸார், தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அப்போதுதான், அவ்விருவரும் ஆண்கள் என்பதனை பொலிஸார் கண்டுகொண்டனர். அவ்விருவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதுதொடர்பில் பொலிஸார் கலந்தாலோசித்து கொண்டிருந்த போது, கைகளை கூப்பிய சந்தேகநபர்களான இருவரும், தங்களை மன்னித்து விடுவிக்குமாறும் ஹோட்டலின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட நட்டஈட்டை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் உரிமையாளரும் அதற்கு இணங்கியமையால், ஹோட்டலுக்கு ஏற்பட்ட, 32ஆயிரம் ரூபாய் சொத்து இழப்புக்கு 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டு அந்த புதுமையான ஜோடி, பொலிஸாருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு, முகங்களை காட்டாமலே பொலிஸிலிருந்து வெளியேறிவிட்டது.