ஆண் நண்பர்கள் கண்ணெதிரில் 2 இளம்பெண்கள் கும்பல் பலாத்காரம்

தலைநகர் புதுடெல்லியில் ஆண் நண்பர்களுடன் பூங்காவிற்கு வந்த இரண்டு இளம் பெண்களை 5 பேர் கொண்ட பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியில் அமன் விஹார் பகுதியில் உள்ள பூங்காவிற்கு தனது நண்பர்களுடன், 18 வயது மற்றும் 17 வயது நிரம்பிய  2 இளம்பெண்கள் சென்றிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்களுடன் வந்திருந்த ஆண் நண்பர்களை தாக்கியுள்ளனர்.

பின்னர் இரு பெண்களையும், பூங்கா அருகே இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் தப்பிவிட்ட நிலையில் மற்ற 4 பேரை கைது செய்தனர்.

மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரு இளம் பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பெண்களுடன் வந்த ஆண் நண்பர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காவலர்கள் தெரிவித்தனர்.

ஆண் நண்பர்களுடன் பூங்காவிற்கு வந்த இரண்டு இளம் பெண்களை 5 பேர் கொண்ட பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.