நாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். நம் பாதங்களை மறந்து விடுகிறோம்.
கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்காததாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டிலேயே தடுப்பு முறைகளைக் கையாளலாம். அவை…
தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்த பிறகு பிரஷ்சினாலே சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதவிரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும்.
அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 5 நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.
கல் உப்பு, இடித்த மிளகு இலை இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும்.
கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் குவிந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். இந்த வலி வராமல் இருக்க வேண்டும் என்றால் பாதங்களை சீராக பாதுகாக்க வேண்டும்.
நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு கூடும்.
இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க பாதங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு நல்ல ஆயுர்வேத நிபுணரை அணுகினால் அவர்கள் உங்கள் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறும் சிகிச்சை செய்யலாம் என்று ஆலோசனை கூறுவார்.
அதே சமயம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால் அதற்கு ஏற்றவாறு மசாஜ் செய்வதால் உடல் அலுப்பு, சோர்வும் நீங்கி சுறு சுறுப்பாகவும் இருக்கும்.