அமெரிக்க தென்னஸி மாநிலத் தில் வீடொன்றில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி 6 சிறுவர்கள், 3 வயதுவந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குளிரூட்டி உபகரணத்திற்கான மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ ஏற்பட்டுப் பரவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற அதிகளவானோரைப் பலிகொண்ட தீ அனர்த்தமாக கருதப்படுகிறது.
உயிரிழந்த சிறுவர்கள் 3 இலிருந்து 17 வரையான வயதுடையவர்களாவர். உயிரிழந்த வயது வந்தவர்களில் அந்த சிறுவர்களது பாட்டியான எலொயிஸி புட்ரெல் (61 வயது), கரோல் கொலியர் (56 வயது) மற்றும் லகெயிஸா வார்ட் (27 வயது) ஆகி யோர் உள்ளடங்குகின்றனர்.