பிள்ளையாருக்குப் பூட்டு… ‘அட்ராசக்க’ காரணம்

மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

புதுச்சேரி, மிஷன் வீதி – ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.

”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது.

திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள், தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன.

அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.

ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார்.

அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம்.

இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம்.

சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.

மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.