லண்டனில் வொட்கா போத்தலை திடிருய நபரை காவலாளி கொன்றார்: பொலிசார் அதிரடி

லண்டனில் உள்ள ஷார் சாப்பிங் சென்ரரில் உள்ள ஆஸ்டா சூப்பர் மார்கெட்டில் 30 வயது நபர் வொட்கா போத்தல் ஒன்றை திருடியுள்ளார். 20 வயதே ஆன ஆஸ்டா சூப்பர் மார்கெட் காவலாளி, அவரை மடக்கிப் பிடித்து. கழுத்தில் கிடுக்கிப் பிடி போட்டுள்ளார். தன்னால் மூச்சை எடுக்க முடியவில்லை என்று, குறித்த கள்வன் பல தடவை கத்தியுள்ளான். ஆனால் காவலாளி விட்ட பாடாக இல்லை.

இதனால் குறித்த கள்வன் மூச்சு திணறி இறந்துவிட்டான். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது காவலாளியை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். சம்பவம் நடந்த இடத்தில் நின்ற பலர் கொடுத்த சாட்சியங்களுக்கு அமைவாக , தாம் காவலாளியை கைதுசெய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளார்கள்.

ஒரு வொட்க்கா மதுபாண போத்தலை களவாடப் போய். உயிரை விட்ட கதையாவிட்டது.



Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.