12 ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 17 க்கு பின் என்ன நடக்க போகிறது தெரியுமா?

தொழில், கலை, கல்வி, அரசியல் போன்ற துறைகளில் ஜொலிக்க சுக்ரனின் ஆதிக்கமே காரணம் என்று ஜோதிடத்தில் கூறுவார்கள்.

ஆனால் இந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் -17 வரை , நவகிரகத்தில் உள்ள சுக்ரன் பின்னடைவதால் ஒவ்வொரு ராசிக்கும் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் இதோ!

மேஷம்

வருடத்தின் முற்பகுதியில் உங்கள் பழைய உறவுகளை புதுப்பிக்க நேரிடும். ஜூன் முதல் டிசம்பர் வரை நீங்கள் குடும்பத்தினரிடம் நேரம் செலவழிக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையும் தொடங்குவீர்கள். இந்த காலக்கட்டத்தில் எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும்.

ரிஷபம்

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவு உண்டாகலாம். ஆனால் உங்களின் பொறுமை மற்றும் அணுகுமுறையின் காரணமாக தக்க வைத்துக் கொள்ளலாம். எனவே எதையும் நிதானமாக செய்வது மிகவும் நல்லது.

மிதுனம்

துணையை எப்படி அனுசரித்துப் போவது என்று உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் துணையின் குணங்களை தீர்மானிப்பதில் கவனம் தேவை. தவறான விமர்சனத்தை உங்கள் துணையின் முன் வைக்காதீர்கள். ஏனெனில் அது பிரிவினையை ஏற்படுத்திவிடும்.

கடகம்

உங்களுடைய உணர்வுகளுக்கு சோதனை கொடுக்கும் வகையில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் இருக்கும். எனவே துணையுடன் அதிக நேரம் செலவழிக்க முயலுங்கள். வேறொரு உறவினால் நீங்கள் வசப்பட நேரிடலாம் என்பதால் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.

சிம்மம்

இந்த வருடத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பு வகையில் உங்களுக்கு வாய்ப்புகள் வரும் போது, அவசரப்பட்டு உடனடியாக முடிவை எடுக்காதீர்கள். ஆராய்ந்து எடுப்பது மிகவும் அவசியம்.

கன்னி

உங்களின் பழைய நண்பர்கள், காதல் புதுப்பிக்க நேரிடலாம். அதே சமயம் புது உறவுகளும் உண்டாக்கும். குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவழிப்பீர்கள். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்கள் காதல் வாழ்க்கை இனிதாக அமையும்.

துலாம்

உங்கள் நெருங்கிய உறவு ஒன்று பிரிய நேரிடலாம். ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் காதலியோடு அல்லது காதலனோடு கருத்து வேறுபாடு உண்டாகும். இதுவே உங்கள் பிரிவிற்கு காரணமாக அமையலாம். எனவே எச்சரிக்கை மிகவும் தேவை.

விருச்சிகம்

இந்த வருடத்தின் மத்திய காலத்தில் உங்கள் துணையுடன் மோதல் உண்டாகலாம். ஆகவே உங்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து போகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தனுசு

உங்களுக்கு சுக்ர திசை பின்னடைவதால், பல்வேறு குழப்பங்கள் உண்டாகலாம். தேவையில்லாத சச்சரவுகள் வரலாம். ஆனால் வருட இறுதில் நல்ல நிகழ்வுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும்.

மகரம்

இந்த வருடம் உங்களுக்கு அருமையாக இருக்கும். நல்ல விஷயங்களையே பார்ப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையுடனும் இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

கும்பம்

உங்கள் துணையுடன் இனி தான் வாழ்க்கை நடத்த சரியான தருணம். ஏனென்றால் இந்த வருடத்தில் ஒருவரையொருவர் அனுசரித்து செல்லும்படி வாய்ப்புகள் அமையும். ஒற்றுமையும் கூதுகலமும் காணப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

மீனம்

இந்த வருடத்தில் சுமூகமாக உங்கள் துணையுடன் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். நீங்கள் செய்யும் காரியங்கள் எதிர்மறையாக முடியலாம். எனவே பேசும்போதோ அல்லது ஓர் காரியத்தை உங்கள் துணைக்கு செய்யும் போதோ அவர்களின் விருப்பபடி செய்வது மிகவும் நல்லது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.