நம்மை உருவாக்கியது ஏலியன்ஸா? வேறு கிரகத்தில் இருந்து மனிதரை அனுப்பிய ஏலியன்கள்.

வேறு கிரகம் ஒன்றில் இருந்து உயிரினத்தை உருவாக்க கூடிய, மூலக் கூறுகளை ஏலியன்கள் அனுப்பினார்கள் என்றும். இதனை மேஜிக் 37 என்ற இலக்கம் கொண்டு தாம் அழைப்பதாகவும் உலகப் புகழ்பெற்ற இரட்டை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அண்டவெளியில் பல கோடி கிரகங்கள் காணப்பட்டாலும். அதில் உயிரினங்கள் வாழக்கூடிய ஏதுவான சூழல் காணப்படும் கிரகங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஒரு கிரகத்தில் தண்ணீர் ஆக்சிஜன் போன்றவை இருந்தாலும். உயிரினம் என்பது தோன்றுவது கடினமான விடையம். அதற்கு தேவையான ஒருவகையான மூலக் கூறுகள் தாமாக உருவாகுவது இல்லை என்று கண்டுபிடித்துள்ளார்கள் தற்போதைய விஞ்ஞானிகள்.

உயிரினங்கள் தோன்றக் காரணமாக அமையும் சக்சீனிக் அமிலம், அமினோ ஆசிட் போன்றவையே புரதங்களோடு இணைந்து டி.என்.ஏ மூலக்கூறுகளை உருவாக்குகிறது. உயிரினங்களில் உடலில் காணப்படும் டி.என்.ஏ மிகவும் முக்கியமான ஒரு மூலக் கூறு ஆகும். இவையே பரம்பரையை சந்ததிகளுக்கு கடத்துகிறது. இவையே ஒரு உயிரினம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கிறது. அந்த வகையில் குறித்த டி.என்.ஏ யில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை 37 என்றும் அதன் புரதத்தில் காணப்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 74 (அதாவது பிரித்தால் 37 தான் வரும்) என்று கூறுகிறார்கள். அத்தோடு அமினோ ஆசிடில் உள்ள மூலக்கூறுகள் 1665 இதுவும் 37ன் பெருக்கம் தான்.

இப்படி பல மூலக் கூறுகள் 37 இலக்கம் உடையவை. இது இவ்வாறு அமைய என்ன காரணம் ? ஏலியன்கள் இதனூடாக எமக்கு ஏதாவது ஒரு தகவலை அல்லது ரகசிய தகவலை வழங்கி உள்ளார்களா என்று பிரபல கணித மேதைகளுடன் இணைந்து விஞ்ஞானிகள் ஆராட்சி நடத்தி வருகிறார்கள். பூமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இருந்தாலும். அதில் உயிர் இனங்கள் வாழ ஏதுவான சூழல் சில யுகங்களுக்கு முன்னர் தான் உருவாகியது. அந்தவேளையில், பூமியில் மோதிய ஒரு விண் கல்லில் இருந்து தான் மூலக் கூறுகள் கடலில் கரைந்து உயிரினங்கள் தோன்ற காரணமாக அமைந்துள்ளது என்றும். குறித்த விண் கல் ஏதோ எதேட்சையாக பூமிக்கு வரவில்லை என்றும். அது பூமியை நோக்கி ஏவப்பட்ட விண் கல் என்றும் விஞ்ஞானிகள் பலமாக நம்புகிறார்கள்.

பூமியில் மனிதன் மற்றும் ஏனைய உயிரினங்கள் தோன்ற, ஒரு வகையான ஏலியன்களே காரணம் என்று தாம் தற்போது கண்டுபிடித்துள்ளதாக, மக்சிம் மக்கோவ் மற்றும் பேசின்கோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளார்கள். நாம் வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இருக்கிறார்களா என்று ஆராய்ந்து வருகிறோம். ஆனால் பூமியில் நாம் பிறந்திருந்தாலும், நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் அல்ல என்றும். நாமும் ஒருவகையான ஏலியன்கள் தான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால் எமது உடலில், உள்ள சில அணு மூலக் கூறுகளே ஆகும். அவை பூமிக்கு சொந்தமானது அல்லது என்று தாம் அறிந்துள்ளதாக இவர்கள் ஒரு கருத்தை தெரிவித்து பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளார்கள்.


Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.