லண்டன் மத்திய நகரமே லாக் -டவுன்: பெரும் பரபரப்பு

லண்டன் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்துடன் மோத என வேகமாக ஒரு காரை நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அத்தோடு அப்பகுதியில் உள்ள பலரை காரால் இடித்துக் கொல்லவும் அவர் திட்டம் தீட்டியுள்ளார். கடும் வேகத்தில் அவர் காரை ஓட்டி வந்து பலர் மீது மோதியுள்ளார் எனவும்.

பின்னர் அவர் காரை விட்டு இறங்கி ஒரு பொலிஸ்காரரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பொலிசார் சுட்டதில் அன் நபர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதேவேளை பெரும் பொலிசார் அப்பகுதில் குவிக்கப்பட்டு. அவ்விடத்தை பொலிசார் லாக் டவுன் செய்துள்ளார்கள். ஆளில்லா விமானங்கள் அவ்விடத்தை நோட்டமிடுவதாகவும். தேம்ஸ் நதிக் கரையில் பொலிஸ் படகுகள் ரோந்து செல்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நேரப்படி சரியாக 2.40 க்கு காரில் வேகமாக வந்த நபர், சுமார் 12 பேரை தாக்கி விட்டு. இறுதியாக காரை பாராளுமன்றத்தினுள் செலுத்த முற்பட்டவேளை அவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். குறித்த நபர் காரில் இருந்து வெளியே இறங்கி கத்தியால் பொலிஸ்காரர் ஒருவரை தாக்கிய வேளை ஏனைய பொலிசார் அவரை நோக்கி சுட்டுள்ளார்கள்.

இதனால் அப்பகுதில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில். நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அவ்விடத்தில் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள வேளை. சற்று அருகே தான் நம்பர் 10 டவுனிங் வீதி உள்ளது. அங்கே வசிக்கும் பிரித்தானிய பிரதமர் திரேசா மே தற்போது பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

அவரது இல்லத்தில் நிலத்தின் கீழ் பாதுகாப்பு அறை உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த அறைக்கும் அடைத்து பாதுகாப்பது வழக்கம். புலிகள் விமானத்தின் மூலம் கொழும்புக்கு குண்டு போட்டவேளைகளில். அலரி மாளிகையில் சுரங்கம் வெட்டி அதில் மகிந்த பதுங்கிக் கிடந்தார். அது போல டவுனிங் வீதியிலும் ஒரு சுரங்கம் உள்ளது. இதனை அவ்வளவு எழிதில் உடைத்து உள்ளே செல்ல முடியாது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.