திருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்! லண்டனில் பேரதிர்ச்சி.

பிரித்தானிய நாட்டில் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக மணமகன் பெண் ஒருவரை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரை சேர்ந்த பிளைன் மெக்கன்(28) என்ற நபருக்கு கடந்த ஜனவரி 13-ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது கர்ப்பிணி மனைவியை திருமணம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக மணமகன் வெளியே சென்றுள்ளார். அப்போது, சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரை தாக்கி அருகில் உள்ள விக்டோரியா பூங்காவிற்கு இழுத்துச் சென்று இரண்டு மணி நேரமாக கற்பழித்துள்ளார். பின்னர்,

பெண்ணின் கைப்பேசியை திருடிக்கொண்ட மணமகன் அங்கிருந்து திருமணம் மண்டபத்திற்கு சென்றுள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பிறகு இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து பொலிசார் மணமகனை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே ஒரு கற்பழிப்பு குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் விடுதலையான அவர் தற்போது மீண்டும் ஒரு பெண்ணை கற்பழித்துள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் 28-ம் திகதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.