அமெரிக்காவில்சரமாரியாக குண்டுகளை பொழியவிருக்கும் வடகொரியா!

தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டால் ‘ஈவு இரக்கமற்ற’ முறையில் தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற பயிற்சிகளை வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகவே தாம் கருதுவதாகவும் இதனாலேயே தாம் இது குறித்து ஒரு கடுமையான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது. கடந்த பதினோராம் திகதி மட்டும்,

எதிரிகளின் போர் விமானங்கள் வடகொரிய கடல் மற்றும் வான் எல்லைப் பரப்புக்கு நெருக்கமாகப் பறந்து தம் மீது குண்டு வீசவும் அதிர்ச்சித் தாக்குதலை நடத்தவும் பயிற்சி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சிகள் தொடருமானால் அவை மீது தரை, வான்,

கடல், ஆழ்கடல் என அனைத்துப் படைகளும் இரக்கமற்ற முறையில் தாக்குதலை நடத்தும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, கடந்த வாரம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் நான்கை வடகொரியா பரிசோதனை செய்திருந்தது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.