இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும்.
இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.