சிரியாவில் இன்று நடந்த கோர யுத்தத்தால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி

சிரியாவில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் பிரிட்டன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிரியா உள்நாட்டு போர்: 6 வருடங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி மொசூல்: சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 6 வருடங்களாக சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.எஸ் தீவிரவாதிகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பிடியில் சிக்கியுள்ள நகரங்களை மீட்க சிரிய ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ வீரர்களும் சிரியாவில் கூட்டுமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் நடைபெற்று வரும் போர் குறித்த ஆய்வு ஒன்றை பிரிட்டன் மனித உரிமை கவுன்சில் அமைப்பு நடத்தியது. அந்த ஆய்வில், கடந்த 6 வருடங்களில் இதுவரை 3,21,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 96,000 பேர் பொதுமக்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 1,45,000 பேரை காணவில்லை என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிரிய அரசு சார்பில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களில் சுமார் 83,500 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.