4000 பெண்களை கடத்தி விற்று வசமாக சிக்கிய தம்பதியினர்: இந்தியாவில் பரபரப்பு சம்பவம்

பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழிலாக செய்து வந்த தம்பதியினரை கைது செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் டெல்லி நகரில் பெண்களை கடத்தும் குழுவினரை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது டெல்லியைச் சேர்ந்த கணவன், மனைவியான அபக் உசேன், சாய்ரா பேகம் ஆகியோரை கைது செய்துள்ளனர். குறித்த தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப் பெரிய தொழிலாக செய்து வந்த அதிர்ச்சிகரமான விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட, இளம் பெண்களை ஏமாற்றி கடத்தியுள்ளதோடு, விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர், அத்தோடு நாடளாவிய ரீதியில் கடத்தல் குழுக்களை உருவாக்கி செயற்பட்டுள்ளார்கள். அபக்உசேன், சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி வாங்கியுள்ள பல்வேறு பெறுமதி மிகு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கெதிரான மேலதிக விசாரணைகளை, டெல்லி பொலிஸார் தீவிரகமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.