உறவுக்கு மறுத்த காதலி! போதையில் காதலன் வெறிச்செயல்!

காசியாபாத், லோனி அருகே உடலுறவுக்கு மறுத்த காதலியை கொலை செய்து துணியில் சுற்றி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் அருகே லோனி பகுதியை சேர்ந்தவர் திஷா (35). அதே பகுதியை சேர்ந்தவர் பின்னி. இருவரும் லிவ்விங் டூ கெதர்  உறவில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்கள். ஹோலி பண்டிகையொட்டி தனது நண்பர் சயீத் என்பவரை வீட்டிற்கு அழைத்திருக்கிறார் பின்னி.

இருவரும் வீட்டிலேயே ஒன்றாக மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது மதுபோதையில் இருவரும் கூட்டாக திஷாவை உடலுறவுக்கு அழைத்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த திஷா, அதற்கு மறுத்திருக்கிறார். போதையில் இருந்த பின்னியும், சயீத்தும் திஷாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே இருவரும் திஷாவை பிடித்து கட்டிலில் தள்ளி விட்டிருக்கிறார்கள். அப்போது எதிர்பாரதவிதமாக திஷாவின் தலை அருகிலிந்த டேபிளில் மோதி அடிபட்டிருக்கிறது.

அதன் பின்னரும் போதையில் இருந்த இருவரும் பீர் பாட்டிலால் திஷாவின் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்கள். திஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை உறுதிப்படுத்திய பின்னியும், சயீத்தும் திஷாவின் உடலை துணியில் சுற்றி அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் பிணத்தை அரைகுறையாக புதைக்கின்றனர்.

ஹோலிபண்டிகை முடிந்த மறுநாள் அப்பகுதியினர், அங்கு அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த திஷாவின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் பின்னியும், சயீத்தும் சேர்ந்து கொலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.