நிர்வாணமாக ஆடு வெட்டி போராடிய இளம்பெண்கள்!

ஐரோப்பிய நாடான போலாந்தில் 11 இளம்பெண்கள் உட்பட 14 பேர் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்டை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் நாஜி சித்திரவதை முகாமான Auschwitz-விலேயே இப்போராட்டம் நடைபெற்றது.

Auschwitz நுழைவாயில் முன் திடீரென கூடி 11 இளம்பெண்கள் உட்பட 14 பேர் ஆடு வெட்டி படுகொலை செய்து ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போராடியுள்ளனர்.

மேலும், அவர்கள் போராட்டத்தை ஆளில்லா விமானம் பயன்படுத்தி பதிவு செய்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருங்காட்சியக பாதுகாவலர்கள் அவர்களை தடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் 14 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு யூத மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 27 வயதுடையவர்கள் என பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

எனினும், தற்போது, வரை கைது செய்யப்பட்டவர்களின் அடையாளம், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் நோக்கம் வெளியாகவில்லை.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.