மாண்ட்ரீல் பகுதியலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாண்ட்ரீல் வணிக மையத்திறகு மேல் இரு விமானங்களும் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் ஒன்று வணிக மைய கூரையின் மேல் விழுந்துள்ளது.
மற்றொன்று வாகனம் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது, இந்த விபத்தில் ஒரு விமான ஓட்டி உயிரிழந்துள்ளார்.
பலத்த காயமடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் யாருக்கு எந்த பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால், போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தினால் விமான ஓட்டிகளுக்கு இடையே இருந்த பிரச்னையே விபத்திற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.