மலேசியாவில் சவுதி மன்னரை போட்டுத்தள்ள பாரிய மாஸ்டர் பிளான்!

சவுதி அரேபியா மன்னரை கொலை செய்வதற்கு போடப்பட்டிருந்த சதித் திட்டம், மலேசிய பொலிஸாரின் அதிரடியால் முறியடிக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னர் சல்மான் பின் அண்மையில் இந்தோனேசியாவிற்கான தனது சுற்று பயணத்தை நிறைவு செய்த நிலையில் மலேசியாவிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டு தலை நகரான கோலாலம்பூரில், மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. சவுதி மன்னரின் மலேசிய விஜயத்திற்கு 1 மதத்திற்கு முன்னரே, ஏமனிலிருந்து வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்ளிட்ட ஏழுபேரை மன்னரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்த குற்றத்திற்காக கைது செய்துள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் ஹாலித் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி அரேபிய படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மன்னரை கொள்வதற்கான சாதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.