பெரம்பலூரில் கார்த்திகேயன் என்ற மந்திரவாதி பெண் சடலத்துடன் நள்ளிரவு பூஜை நடத்தி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்த பெண் சடலம் யாருடையது எனப் போலிசார் கண்டு பிடித்துள்ளனர். பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இதில் வெளியாகியுள்ளது.சென்னை தேனாம்பேட்டை, எம்.எம். கார்டனை சேர்ந்த ஜெயராமனின் மூத்த மகள் அபிராமி (20) ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்துவந்தார். அவர் சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த அபிராமி கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணம் மயிலாப்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. கார்த்திகேயன் சென்னைக்கு வந்து மயிலாப்பூர் சுடுகாட்டில் இருப்பவர்களிடம் பணம் கொடுத்து தனக்கு இளம் பெண்ணின் சடலம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
சுடுகாட்டு ஊழியர்கள் 5 ஆயிரத்திற்காக புதைக்கப்பட்ட அபிராமியின் சடலத்தை எடுத்து கார்த்திகேயனுக்கு கொடுத்துள்ளனர்.
மந்திரவாதி பயன்படுத்திய சடலம் , இளம் பெண் அபிராமியுடையது எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து அபிராமியின் பெற்றோருக்கு போலிசார் தகவல் கொடுத்துள்ளனர்.
செத்த பிணத்திலும் வியாபாரம் செய்யும் இது போன்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனது மகள், மகன், அம்மா அப்பாவின் சடலத்திற்கு ஈமைக்காரியம் செய்து விட்டு வீடு திரும்பும் உறவினர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு தெரியாமலே நமது உறவினர்களின் சடலத்தை வைத்து இவ்வளவு பெரிய வியாரம் நடந்து கொண்டிருக்கின்றது என.