தன் மனைவியை 24 முறை கோடாரியால் கொடூரமாக தாக்கிய கணவன்

அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார்

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் வசிக்கும் அந்த நபர் நேற்று அங்குள்ள ஒரு பிரபல ஷொப்பிங் மாலுக்கு வந்துள்ளார்.

அங்கு தனது முன்னாள் மனைவியை பார்த்த அவர் ஆத்திரத்தில் அவரை கோடாரியால் பலமாக உடல் முழுவதும் தாக்கியுள்ளார்.

மொத்த 24 முறை அவர் முன்னாள் மனைவி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் முகம், கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர செயலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் அங்கிருந்தவர்களிடம், நான் என் மனைவியை பிரிந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் எனக்கு செய்த துரோகத்தால் தான் அவரை நான் பிரிந்தேன். தற்போது அவர் வேறு ஒரு ஆணுடன் வாழுகிறார்.

அது பிடிக்காமலும், அவர் அழகு என்ற திமிரை சிதைக்கவும் தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜீலை மாதம் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.