ஒன்றரை இலட்சம் கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் கொத்தாக சிக்கியது.

அமெரிக்க கரையோர காவற்படை நடத்திய ஒரு மாத கால தேடுதல் வேட்டையின்போது, சுமார் பதினாறு தொன் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இதன் மொத்த மதிப்பு சுமார் 420 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் சுமார் அறுபத்து நான்காயிரம் கோடி ரூபா! பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள ஃப்ளோரிடா மாகாண துறைமுகப் பகுதியிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதினாறு தொன் என்று அளவிடப்பட்டுள்ள இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் - அதாவது,


இலங்கை மதிப்பில் சுமார் ஒன்றரை இலட்சம் கோடி ரூபா பெறுமதியானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஒரு மாத கால தேடுதல் வேட்டையில் அமெரிக்கா, கனடா மற்றும் உள்முக முகவர் அமைப்புகளும் ஈடுபட்டன. இதில் மறைவில் இருந்து விரைவாகச் செல்லக்கூடிய படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. தேடுதல் நடவடிக்கையில் ஏழு கப்பல்கள் சோதனையிடப்பட்டதாகவும், அதில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.