சாய்பாபா கோவிலில் ஒளி வடிவில் தோன்றிய பாபா: சிசிடிவியில் பதிவான அதிசய காட்சி

இந்தியாவில் உள்ள பிரபல சாய்பாபா கோவிலில் பாபா போன்ற ஒளி தோன்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டம் உண்சூரில் உள்ள பிரபல சீரடி சாய்பாபா கோவிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

கோவில் அலுவலகத்தில் சிசிடிவி கமெரா பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் ஊழியர் வீடியோவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது கருவறையின் ஒரு பகுதியில் லைட் வெளிச்சத்தில் பாபாவின் உருவம் பதிவாகி இருந்துள்ளது.

அதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், உடனே காட்சி தெரிந்த இடத்திற்கு ஓடி சென்று பார்த்தபோது, பாபாவின் உருவம் தெரியவில்லை. மீண்டும் கமெராவில் பதிவாகியதை பார்த்தபோது, அதில் உருவம் தெரிந்துள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து கமெராவில் பதிவாகியுள்ள பாபாவின் உருவத்தை பார்த்துள்ளனர்.

இது தொடர்பான தகவல் உடனடியாக காட்டு தீப்போல் பரவியது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி கூறியதாவது: காலை 7.30 மணி அளவில் சிசிடிவி அறையில் அமர்ந்திருந்தேன். எதார்த்தமாக பார்த்துக்கொண்டிருந்தபோது சாய்பாபா முன்பு வெள்ளை நிறத்தில் ஒரு ஒளி தோன்றியது.

அதில் சாய்பாபா போன்ற உருவம் தோன்றியது. உடனடியாக சாய்பாபா சிலை முன்பு ஓடிச் சென்று பார்த்தேன். ஆனால்அந்த உருவம் மறைந்துவிட்டது என கூறியுள்ளார்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.