பொகவந்தலாவ - செல்வகந்த தோட்டத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கபட்டுள்ளதாக பொகவத்தலாவ பொலிஸாா் தெரிவித்தனா்
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் சுப்ரமணியம் சந்திரகுமாா் (49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) காலை மேசன் தொழிலுக்கு சென்ற குறித்த நபா் மாலை வேளையில் வீட்டுக்கு வந்தாகவும் அதன் பிறகு குறித்த நபா் இரவு 7 மணியளவில் விஷம் அருந்தியதாகவும் நபரின் மனைவி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த நபரை ஏன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லையென பொலிஸாா் கேள்வி எழுப்பியதற்கு, “என்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டாமென” கணவர் தெரிவித்ததாக அவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹட்டன் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment