யாழில் மீண்டும் வாள் வெட்டு! 8 பேர் படுகாயம்

கோப்பாய் இராஜவீதியில் அமை ந்துள்ள கள்ளு தவறணையில் நேற்றைய தினம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் வீதியால் சென்ற வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோப்பாய் இராஜவீதியும் மானிப்பாய் வீதியும் இணையும் சந்திக்கு அருகில் அமைந்துள்ள கள்ளு தவறணை ஒன்றில் நேற்றைய தினம் இரு குழுக்களிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் குறித்த பகுதிக்கு 4 மோட்டார் சைக்கிள்களில் பொல்லுகள், வாள்களுடன் வந்த 8 பேர் சந்தியில் நின்று தமது முகங்களையும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகளையும் துணிகளால் மறைத்து கட்டியபடி தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர். பின்னர் கள்ளு தவறணைக்குள் நுழைந்து அங்கு நின்றவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன் வீதியால் சென்ற வாகனங்களையும் பொல்லுகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் தலை மற்றும் கைகளில் காயமடைந்ததுடன் அங்கு நின்றவர்களுடைய மோட்டார் சைக்கிள்கள் பலவும் அடித்து நொருக்கப்பட்டது. அத்தோடு அவ்வீதியால் சென்ற ஹயஸ் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கள்ளுத் தவறனைக்கு அருகிலேயே புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படையினரின் பாரிய பிரிகேட் முகாம் அமைந்துள்ளது. அந்த இராணுவ முகாமில் உள்ள புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடனேயே குறித்த ரவுடிகள் அங்கு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.