டுபாயில் 63 வயதில் முதன் முறையாக குழந்தை பெற்ற இலங்கை பெண்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயதுடைய பெண்ணொருவர் முதன் முறையாக குழந்தை பெற்றுள்ள சம்பவம் அண்மையில் டுபாயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் 13 வயதில் குழந்தை உள்ளதாகவும் தற்போது 2வது திருமணம் செய்த அவர் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு முறை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு டுபாயில் குழந்தை பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குழந்தை 2.25 கிலோ எடை உள்ளதாகவும் ஆனால் தம்பதியின் பெயர் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக 60 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெறுவது மிகவும் ஆபத்து என கூறும் நிலையில் ஆரோக்கியமான முறையில் முதன் முறையாக இலங்கை பெண்ணொருவர் குழந்தையை பெற்றுள்ள சம்பவம் தற்போது வைரலாகிவருகின்றது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.