லண்டனில் ரகசியமாக நடந்த கதிரியக்க சோதனை: ரஷ்யா தூவிய மர்ம பொடி மக்களை தாக்குமா

ரஷ்யா ஆர்டிக் கடலில் மர்மமான முறையில் அணு குண்டு சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது எனவும். அதில் இருந்து காற்றில் கலந்துள்ள கதிரியக்கம் கொண்ட துகள்களால், ஜேர்மனி , பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போக கதிரியம் கொண்ட இந்த துகள் காற்றில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை பல நாடுகள் மறைத்து வருகிறது. இன் நிலையில் குறித்த கதிரியம் கொண்ட துகள்கள் பிரித்தானிய வழி மண்டலத்திலும் கலந்துள்ளதா என்று ஆராய, இன்றைய தினம்(22) அமெரிக்காவில் இருந்து விசேட ராணுவ விமானம் ஒன்று வந்துள்ளது.

WC 135 என்று அழைக்கப்படும் இந்த ராணுவ விமானம், வானத்தில் பறந்தபடியே நிலத்தையும் காற்றையும் ஸ்கேன் செய்து அதில் எங்காவது கதிரியக்கம் கொண்ட தூகள்கள் உள்ளதா என்று கண்டுபிடித்துவிடும். இதனை பிரித்தானியாவுக்கு அனுப்புமாறும். பிரித்தானிய வழி மண்டலத்தை பரிசோதனை செய்யுமாறும். திரேசா மே அம்மையார் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அமைவாக அமெரிக்கா உடனடியாக இந்த அதி நவீன விமானத்தை பிரித்தானியாவுக்கு அனுப்பியுள்ளது. குறித்த விமானம் பறப்பில் ஈடுபட்டு, பல பகுதிகளை ஸ்கேன் செய்துள்ளது என தற்போது ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் முழுமையான அறிக்கை விரைவில் மக்களுக்கு கிடைக்கும். குறித்த கதிரியக்க தூசி துகள்கள், மனிதர் மேல் பட்டாலோ. அல்லது அதனை மனிதர் சுவாசித்தாலோ , சில மாதங்களில் உடனே புற்று நோய் உருவாகி இறக்க நேரிடும். இது போல பல ஐரோப்பிய நாடுகளில் தற்சமயம் நடந்துள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் மெளனம் காப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா செய்துள்ள இந்த நாசகார வேலையை, ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடிக்கவே இவ்வளவு வாரங்கள் பிடித்துள்ளது. இதனை மக்கள் அறிந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லவா. சுயலாபம் கருதியே இதனை அன் நாட்டு அரசுகள் மூடிமறைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.