பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்.

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகர், டி.பிளாக், 13வது முக்கிய சாலையை சேர்ந்தவர் சிவசங்கர்(45). சிவசங்கர் பெயிண்டிங் மற்றும் கார்பெண்டராக பணியாற்றிவந்துள்ளார். ஆனால், சமீப காலமாக  இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், தினமும் மனைவியை அடித்து துண்புறுத்திவந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவசங்கர் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது சிவசங்கரின் மகன் வசந்த் வீட்டில் இருந்துள்ளார். தாயை தந்தை தாக்குவதை பார்த்த மகனுக்கு கோபம் வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்து கத்தியை எடுத்து ஆவேசமாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த சிவசங்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்த  போலீசார் மகன் வசந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.