எரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தடம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவையில் இருந்து அனுராதபுரம் வரை பயணித்த இந்த ரயில் செனரத்கம மற்றும் தம்புத்தேகம பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
ரயில் பாதையை சீர்படுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில் தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.