ஜேர்மன் வான்பரப்பில் 330 பயணிகளுடன் மாயமான லண்டன் விமானம்.

மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜேர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகளை இழந்ததாக பிபிசி உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது.  குறித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜேர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜேர்மனி நாட்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துள்ளது.

பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.  இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து குறித்த விமானம் பறந்த திசை நோக்கி ஜேர்மனியின் போர் விமானங்கள் சீறிப் பறந்துள்ளது.

போர் விமானங்கள் அருகே சென்று அந்த விமானத்தை பாதுகாப்பாக கூட்டி வந்து தரையிறக்கியுள்ளது என பிந்திய தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.