8 வயது சிறு­வனை ஆயு­தத்தை காண்­பித்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய 10 வயது சிறுவன்

8 வயது சிறுவன் ஒரு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை மற்றும் ஆயு­தத்தைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் கீழ் 10 வயது சிறுவன் ஒருவன் கைது­செய்­யப்­பட்டு சிறு­வர்­க­ளுக்­கான நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

பேர்த் நகரின் வட புற­ந­கரப் பகு­தியை சேர்ந்த குறிப்­பிட்ட சிறுவன் தன்னை விடவும் இரு வயது இள­மை­யான சிறு­வ­னை கத்­தியைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விடுத்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளான். பேர்த் சிறுவர் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற இந்த வழக்கு விசா­ர­ணையின் போது மேற்­படி வழக்கை விசா­ரித்த நீதி­பதி, அந்த சிறுவன் நீதி­மன்ற செயற்­கி­ர­மங்­களை புரிந்து கொள்ளும் பக்­கு­வத்தை அடை­யா­ததால் அவ­னுக்­கான தண்­ட­னையை பிற்­போட்டு அவனை பிணையில் செல்ல அனு­ம­திப்பதாகத் தெரிவித்தார். அதே­ச­மயம் அவனை தீவிர கண்­கா­ணிப்பின் கீழ் பாட­சாலைக் கல்­வியைத் தொடர அவர் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அந்த சிறுவன் கல்வி கற்கும் பாட­சா­லையைச் சேர்ந்த ஏனைய மாண­வர்­களின் பெற்றோர் சிறுவன் குறிப்பிட்ட பாடசாலையில் தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.