மகளை அடித்துக் கொலை செய்த தாய்: தொடர்ந்தும் மறியலில்...

அம்பாறை மாவட்டம், மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் வளர்ப்பு மகளை அடித்துக் கொலை செய்த சந்தேக நபரான தாயை எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.பேரின்பராஜா வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.கடந்த மே மாதம் செவ்வாய்க்கிழமை (31) தாய்க்கும் மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார்.

இந்நிலையில், மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்தது.தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அம்மகளின் தாய் (வயது 55) சந்தேகத்தின் பேரில் தாயார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை வெள்ளிக்கிழமை (17) மீண்டும் கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ. பேரின்பராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.