மட்டக்களப்பு முகாமில் தோண்டத் தோண்ட எழும்புக்கூடுகள் வருவதால் பரபரப்பு

மட்டக்களப்பு மாவட்டம் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு அண்மையில் உள்ள காணியில் மனித எச்சம் காணப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நேற்றும், இன்றும் அதிகாரிகள் நிலத்தினைத் தோண்டி ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதி நிலத்தை அகழும்போது மனித எச்சங்கள் வந்துகொண்டிருப்பதாக முறக்கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இன்று கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களுடன் காணப்பட்ட இரும்புக் கம்பிகள் மற்றும் மண் மாதிரிகள் என்பன ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஒப்படைத்து பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்திற்கு மேலதிக நீதவானும், மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் ஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி. சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ.வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த ஆகியோர் அடங்கிய குழு பயணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் முன்னிலையிலேயே குறித்த எச்சங்களும் மீட்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.