புறப்பட்டு சில வினாடிகளில் விபத்துக்குள்ளான விமானம் ; பயணித்த அனைவரும் உயிரிழப்பு (வீடியோ இணைப்பு)

அவுஸ்ரேலியாவின் மெல்போனில் பிரபலமான பேரங்காடியொன்றின் மீது சிறிய விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெல்போனின் புறநகர் பகுதியில் உள்ள எசன்டன் விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த  பேரங்காடி மேற்புறக் கூரையில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும்  உயிரிழந்ததாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்து அவுஸ்ரேலிய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் இம் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து சுற்றூலாவிற்கு வருகை தந்தவர்களே பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து எசன்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், விபத்து குறித்த விசாரணையை  அவுஸ்ரேலியாவின் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் மெல்போன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.