சிறைச்சாலையின் பெயரில் மஹிந்தராஜபக்ச கட்டிய ஆடம்பர மாளிகை

2009 ஆம் ஆண்டு புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயன்படுத்திய மாளிகைகளின் படங்கள் வெளிவந்தன.

குறிப்பாக தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி மாளிகைகள், நீச்சல் தடாகம், பழ மர சோலை போன்றவற்றின் படங்களும் வெளிவந்தன.

புலிகள் இயக்கத்தின் அழிவு கொடுத்த பேரதிர்ச்சியில் இருந்து மீளாத இலங்கை சமூகம் இப்படங்களை பார்த்து தொடர்ந்தும் அதிர்ச்சியில் மூழ்கி கிடந்தது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ இம்மாளிகைகளை நேரில் சென்று பார்வையிட்டார். இவருக்கு இக்கட்டுமாணங்கள் ரொம்பவே பிடித்து விட்டது. இதனால் இதையொத்த கட்டுமாணங்களை வடக்கிலும், தெற்கிலும் அமைக்க திட்டமிட்டார்.

காங்கேசன்துறையில் இவர் அமைத்த ஜனாதிபதி மாளிகை இவ்வகையில்தான் அமைக்கப்பட்டு சர்ச்சைக்கும் பிரசித்திக்கும் உரித்தானது.

இதே போல பல கட்டுமாணங்களை தெற்கிலும் மேற்கொண்டார். ஆனால் சிறைச்சாலை ஒன்றை ஆடம்பர மாளிகையை போல அம்பாந்தோட்டையில் இவர் கட்டியிருப்பது இப்போது புகைப்படங்கள் மூலம் வெளியில் தெரிய வந்து உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகள் பலவற்றையும் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் தோற்றப்பாடு தோற்கடிக்கின்றது.

58 ஏக்கர் காணியில் இது கட்டப்பட்டு உள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலை, கைத்தொழில் கூடங்கள், அலுவலர்களுக்கான தங்குமிட கட்டிட தொகுதிகள் ஆகியவற்றோடு பிரமாண்ட விளையாட்டு மைதானம், விசாலமான நீச்சல் தடாகம் ஆகியவற்றை இது கொண்டு உள்ளது. இதை கட்டி முடிக்க 4996 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது.

ஒருவேளை எதிர்காலத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி ஏற்படலாம் என்கிற அச்சத்தில் அவருக்காகவே மஹிந்த இச்சிறைச்சாலை மாளிகையை கட்டி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.






Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.