அசிட் வீச்சில் பலியாகிய யாழ் மாணவி..!

யாழ்ப்பாணம் இளவாலைப்பகுதியில் மாணவி ஒருவர் மீது அசிட் வீசப்பட்டதில் பாதிப்புக்குள்ளான மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பெண்ணின் தாய் சாட்சியமித்திருந்த நிலையில் வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலதிக சாட்சியாளர்களிடம் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தமது வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த மாணவியின் மீது இனம் தெரியாதவர்கள் அசிட் வீசிச்சென்றுள்ளனர்.

இதில் படுகாயமுற்ற மாணவி 55 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் காதல் விவகாரத்தால் இடம்பெற்றது என சந்தேகித்த பொலிஸார் குறித்த மாணவியை காதலித்த இளைஞன் ஒருவரை கைதுசெய்தனர்.

குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாக இனங்காணப்பட்ட குறித்த மாணவியின் தாயார்,

“சம்பவம் இடம்பெற்ற அன்று இரவு 9.30 மணியளவில் நான் வீட்டில் சமயலறையில் இருந்தேன். எனது மகள் வீட்டின் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார், அத்தருணம் திடீரென மகள் அலறியதுடன் தனக்கு ஏதோ ஒன்று ஊற்றப்பட்ட தாகவும் உடல் எல்லாம் எரிவதாகவும் கூறினார்.

நாம் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தன். அப்போதுதான் மகள் மீது அசிட் ஊற்றப்பட்டது தெரியவந்தது.

எனினும் யார் மகள் மீது அசிட் ஊற்றினார்கள் என நான் காணவில்லை. மகளும் அதை அறிந்திருக்கவில்லை. எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எனது மகளைக் காதலித்து வந்ததும் தொலைபேசியில் குறுந்தகவல் மூலம் மிரட்டல் விட்டதையும் அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தேன்” என தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் மேலதிக சாட்சிகளின் விசாரணைக்காக வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.