மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பகுதியில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந் துள்ளார்.களுதாவளை, எல்லைவீதி எனும் முகவரியில் வசிக்கும் மனேகரன் ஹலுக்சனா (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை தனது வீட்டில் அறையில் தூக்கில் தொங்கி இவர் தற்கொலைக்கு முயற்சித்த சமயம் அவரை மீட்டு குடும்பத்தினர் இவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். இந்த நிலையில் குறித்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் மட்டக்களப்பு தடவியல் பிரிவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த மாணவியின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.