மலேசியாவில் வட கொரிய ஜனாதிபதியின் சகோதரன் கொலை!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் நேற்று திங்கட்கிழமை கிம் ஜோங் நாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் இறப்பதற்கு முன்னால் பின்னால் இருந்து தாக்கப்பட்டதாகவும் அவருடைய முகத்தின் மீது திரவம் தெளிக்கப்பட்டதாகவும் கிம் ஜோங் நாம் தெரிவித்துள்ளார்.

அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.