ஏ9 முறுகண்டிப் பகுதிில் இடம்பெற்ற விபத்து(photos)

A9 வீதியில் பழையமுறிகண்டிக்கும் - திருமுறிகண்டிக்குமிடையில் 18ஆம் போர் என்னும் (பண்டாரவன்னியனுக்கும் வெள்ளையர்களுக்குமிடையில் யுத்தம் நடைபெற்ற) இடத்தில் கனரகவாகனம் குடைசாய்ந்தது.
மாங்குளத்தில் பால் வாகனம் விபத்து துரதிஷ்ட வசமாக உயிர் தப்பிய சாரதி.

இன்று (20) 1.45 மணியளவில் பால் கொள்வனவு செய்யும் நெஸ்லே வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளத்திலிருந்து மல்லாவிக்கு பால் கொள்வனவு செய்வதற்காக சென்று கொண்டிருந்த பால் வாகனம் மாங்குள சந்திக்கு முன்பு ஏ9 பிரதான வீதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று தடம்புரண்டுள்ளது. வாகன சாரதி துரதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

நித்திரை தூக்கம் காரணமாகவே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.