வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொழுவத்தில் இன்று (23) பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமான மாடுகள் வெட்டப்படுவதை அறிந்து கொண்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்றுதுடன் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியும் பெறப்பட்டு வெட்டப்பட்ட மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், எதுவும் இன்றி சட்டவிரோதமான முறையில் கொழும்பிற்கு வெட்டப்பட்ட மாடுகள் கொண்டு எத்தனித்துள்ளனர். இதன்போது அதிகாரிகள் உடனடியாகது துரத்தி பிடித்துள்ளனர்.
இதேவேளை நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளை தனது கடமைகளைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதில் சில உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்று உதவி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
கைப்பற்றிய வெட்டப்பட்ட மாடுகள் மற்றும் வாகனச் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த மாடுகள் அனைத்தும் இளம் பசுமாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.