மூன்று ஆண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த மலையக பெண்

ஹட்டன்- டிக்கோயா வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் இன்று மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

மஸ்கெலியா சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தில் வசித்து வரும் புஷ்பலதா என்ற தாயே இந்த மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இவருக்கு இது நான்காவது பிரசவம் எனவும் ஏற்கனவே அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிறந்த குழந்தைகளை சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். மூன்று ஆண் குழந்தைகளை தாய் பெற்றெடுத்துள்ளதாகவும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.