யாழில் அதிரடிப்படையினரை கண்டு ஓட்டம்பிடித்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் விசேட அதிரடிப்படையினரை கண்டு ஓடிய நபர்களிடம் இருந்து ஆயுதங்கள் மிட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரெழு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் கோப்பாய் பொலிஸாரும், புன்னாலைக்கட்டுவன் சந்திப் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரும் நேற்று இரவு 7 மணியளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் யாழ். உரும்பிராய் பகுதியில் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரை கண்டதும் மோட்டார் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இந்த செயற்பாட்டால் சந்தேகமுற்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றபோது இவர்கள் பயணித்த வண்டி விபத்துக்குள்ளானதால் அவர்கள் தமது மோட்டார் வண்டியையும் வாள்களையும் கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் கைவிட்டுச் சென்ற மோட்டார் வண்டி, வாள்கள் என்பனவற்றை கைப்பற்றி கோப்பாய் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ். புன்னாலைக்கட்டுவன், ஊரெழு பகுதிகளில் இன்றிரவு 07.30 மணியளவில் பெருமளவு துப்பாக்கி ஏந்திய பொலிஸாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளமையால் அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் அச்ச நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.